மனைவியின் பிரிவால் மனமுடைந்த கணவன் எடுத்த விபரீத முடிவு…!samugammedia

சாமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்ட மின்னா பிரிவில் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக  மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அப் பகுதிக்கு உதவி அதிகாரி ஆனந்த பத்மசிறீ மற்றும் சார்ஜன் சிவகுமார் ஆகியோரை மேலதிக விசாரணைக்காக அங்கு அனுப்பி வைத்தார்.

அவர்கள் இருவரும் இணைந்து விசாரணை மேற்கொண்ட போது  உயிரிழந்தவரின் மனைவி அவரை விட்டு விலகிச் சென்றதால் மனம் உடைந்து காணப்பட்டதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி வந்து பார்வை இட்ட பின்னர் சடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உதவி அதிகாரி ஆனந்த பத்மசிறீ தெரிவித்தார்.

Leave a Reply