தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கபட வேண்டும் – இ.தொ.கா வலியுறுத்து!samugammedia

தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டே தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தோட்ட தொழிலாளர்கள் வருடம் முழுவதும் கம்பனிக்கு வருவாய் ஈட்டி கொடுக்கும் வகையில் கடினமாக உழைக்கின்றனர். அவர்கள் வருடத்தில் தைப்பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை கொண்டாடிவரும் நிலையில், வருடம் முழுவதும் கம்பனிக்காக உழைக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் இவ்விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்வாங்காது எனவும் தெரிவித்துள்ளது.

தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்குவது குறித்து இன்று அறிவிப்பதாக கம்பனி தெரிவித்துள்ளது.

Leave a Reply