பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க தொழில் அமைச்சு நடவடிக்கை! samugammedia

நாட்டின் பணியிட பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் சுகாதாரம் தொடர்பான தேசிய கொள்கை , உலக தொழில் துறைக்கு ஏற்றவாறு முழுமைப்படுத்தப்பட்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழில் அமைப்பின் பணிப்பாளர் சிம்ரின் சிங் (Mrs.Simrin Singh) தொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (30) இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தொழில் சட்டத்தில் பணியிடங்களில் ஊழியர்களின் பாதுகாப்புக்கான சூழலைப் முன்னெடுப்பது குறித்து தனி அத்தியாயம் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சாசனத்தின் 155 சரத்தை முழமைப்படுத்துவதாகவும் இது அமைந்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதனடிப்படையில், இது தொடர்பான கருத்துக்களைப் பெறுவதற்கு அடுத்த இரண்டு வாரங்களில் அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்

சிறு வயதிலிருந்தே பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை மக்களின் மனப்பான்மையில் புகுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் பாடசாலைகளில் இருந்தே பாதுகாப்பான பணிச்சூழலை மாணவர்கள் மத்தியில் உருவாக்குவதன் முக்கியத்தை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பணியிடங்களில் பாதுகாப்பான பணிச்சூழல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு தொழில் அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், அத்தகைய சூழலின் முக்கியத்துவம் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

Leave a Reply