முல்லைத்தீவில் 5000 மரக்கன்றுகள் நடுகைத்திட்டம் ஆரம்பம்…! samugammedia

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச சபை , AVALON Resort ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் Green Layer Environmental Organization இன் பங்களிப்புடன் முல்லைத்தீவு நகரில் ஒர் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் “Green Mullai” எனும் தொனிப்பொருளில் 5000 மரக்கன்றுகள்   நடுகைத்திட்டத்தின் ஆரம்ப  நிகழ்வு இன்றைய தினம்(31) முல்லைத்தீவு மாவட்டச் செயலக உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட  அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தார்.

மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், , இராணுவ அதிகாரிகள், இயற்கை ஆர்வலர்கள் என பலர் இந் நிகழ்வில் கலந்து மரக்கன்றுகளை நாட்டினர்.

குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலன்,மாவட்ட பதில் திட்டமிடல் பண்ணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள்,  இயற்கை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply