பல பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை சீனாவின் அரச நிறுவனமொன்றுக்கு வழங்க உள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அதாவது தெற்கு நகரமான ஹம்பாந்தோட்டையில் சீனாவினால் நடத்தப்படும் துறைமுகத்திற்கு அடுத்ததாக சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்க அரசாங்கம் விரைவில் சினோபெக் நிறுவனத்துடன் முதலீட்டு ஒப்பந்தத்தில் ஈடுபடும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்வோம், ”என்று அமைச்சர் விஜேசேகர கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
2019 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள இந்திய குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு 3.85 பில்லியன் டொலர் மதிப்பீட்டைக் கொண்ட இந்த திட்டத்தை இலங்கை முதலில் வழங்கியது.
எனினும், கட்டுமானத்தைத் தொடங்கத் தவறியதை அடுத்து, சுத்திகரிப்பு நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட 1,200 ஏக்கர் (485 ஹெக்டேர்) நிலத்தை மீண்டும் கையகப்படுத்தி, ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்கம் ஒப்பந்தத்தை நிறுத்தியது.
ஹம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகம் 2017 ஆம் ஆண்டு சீன அரசுக்கு சொந்தமான நிறுவனமொன்றுக்கு 99 வருடங்கள் குத்தகைக்கு விடப்பட்டது. இத்திட்டத்திற்காக 1.4 பில்லியன் டொலர் கடனை இலங்கை செலுத்த முடியாமல் போனது.
இலங்கையின் இருதரப்புக் கடனில் 52 சதவீதத்தை சீனா வைத்துள்ளது, மேலும் கொழும்பின் எந்தவொரு முயற்சியிலும் நிலுவையில் உள்ள கடன்களை மறுசீரமைப்பதற்கு பெய்ஜிங்கின் அனுமதி முக்கியமானது.