செக் குடியரசிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய எலிகள்…!samugammedia

செக் குடியரசிலிருந்து இலங்கைக்கு மிகப்பெரிய எலிகள்  கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் செக் குடியரசுக்கும் இடையிலான விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்த   ஒரு ஜோடி ஆண் மற்றும் பெண் கேபிபரா எலிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கேபிபரா எலிகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வகையான எலிகள் தெற்காசிய நாடுகளில் வாழும் அரிய வகை விலங்கினங்களைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விலங்கின் ஆயுட்காலம் சுமார் ஆறு ஆண்டுகள் ஆகும்.

குறித்த விலங்குகள் சுமார் நான்கு அடி உயரம் கொண்டவை எனவும் இவை தாவர உன்னி விலங்கு என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

குறித்த இரண்டு கேபிபரா எலிகளின் தனிமைப்படுத்தல் காலம் முடிந்துவிட்டதாகவும், காட்சிப்படுத்தப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply