ராஷ்மிகா குறித்து இணையத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு

நடிகை ராஷ்மிகா மந்தனா, கவர்ச்சியான ஆடை அணிந்து லிஃப்ட் ஒன்றில்  நுழைவது போன்ற வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த வீடியோவானது  A I தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது எனவும், உண்மையில் குறித்த வீடியோவில் இருப்பது அவர் இல்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் குறித்த வீடியோ ராஷ்மிகா மந்தனா என நினைத்து பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைத்தலத்தில்  பதிவுவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில்  ”இது “மிகவும் பயங்கரமானது. இந்த வீடியோவை பகிர்வதில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன், AI  தொழில்நுட்பம் இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுவது அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

நான்பாடசாலை  அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இப்படி நடந்திருந்தால்  இதை எப்படி சமாளிப்பது என்று என்னால் கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாது.

இதுபோன்ற அடையாளத் திருட்டால் நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு முன், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply