திருமலையில் தபால் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்…!samugammedia

திருகோணமலை -தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் இன்று புதன்கிழமை வேலைக்கு வராது பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால் அஞ்சல் அலுவலகம் திறக்கப்படாது பொதுமக்களுக்கு சேவை வழங்காத நிலையில் காணப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்து வரும் நிலையில் தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நுவரெலியாவிலுள்ள பிரதான தபால் நிலையத்தை ஹோட்டலொன்றுக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Leave a Reply