யாழிற்கு படையெடுத்த மக்கள்…! மழைக்கு மத்தியில் சூடுபிடிக்கும் தீபாவளி வியாபாரம்…!samugammedia

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை(12) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபடுவதை காணமுடிகிறது.

குறிப்பாக யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட நகரப் பகுதி, முனிஸ்வரன் கோயில் வீதி, முற்றவெளிப் பகுதி அங்காடிக்கடைத் தொகுதிகளில் புத்தாடைக் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையிக்கு மத்தியில் உடைகளின் விலைகளும் பெருமளவு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாக பொதுமக்கள்  தெரிவிக்கின்ற அதேவேளை தற்போதைய விலைவாசி காரணமாக தீபாவளியை மகிழ்ச்சியாகக கொண்டாட முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.


Leave a Reply