மாணவர்களுக்கு கறுவா மரக்கன்றுகள் விநியோகம்!

மரநடுகை மாதத்தை முன்னிட்டு, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நேற்றைய தினம் பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்களுக்கு கறுவா மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் ச. விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்தார். பொருளாதாரப் பயன்கருதி அண்மைக்காலமாக வடக்கிலும் கறுவாச் செய்கை முக்கியத்துவம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply