எதிர்கால அரசியல் இளைஞர் யுவதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும்…! மஸ்தான் எம்.பி கோரிக்கை..!samugammedia

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்ற நிலைமைகளினால் தான் நாட்டில் உள்ள அதிகாரிகளின் மீது நம்பிக்கை இழந்து இளைஞர் யுவதிகள் வீதிகளில் இறங்கி போராடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறான நிலமைகள் இனிவரும் காலங்களில் உருவாகாமல் இருப்பதற்கு ஏற்ற ஒரு பொருத்தமான சட்டம் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 இளைஞர்கள் யுவதிகளும் அரசியலிற்குள் வந்து இங்குள்ள நிலமைகள், தாங்கள் செய்ய வேண்டிய பொறுப்புக்கள், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய நிலைமைகளை உணரும் பொழுது கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலமைகள் ஏற்படாமல் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஆகவே இளைஞர் யுவதிகளின் அரசியல் பிரவேச எண்ணிக்கையில் அதிகரிப்பு எற்படுத்தப்பட வேண்டும்.

பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் குண்டு மழை பொழியப்பட்டு வரும் நிலையில் இளைஞர் யுவதிகள் மட்டும் அல்ல சிறார்களும் கொன்று குவிக்கப்படுகின்றார்கள்.

எனினும் அதனை ஜனநாயகம் ஜனநாயகம் என பேசுகின்ற பல நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பிறகு உலகலாவிய ரீதியில் எங்கும் அழிவுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக ஐக்கிய நாடுகள் பொது சபை என்ற ஒன்று உருவாக்கப்பட்ட நிலையிலும் தற்போது அதற்கு மாறாக அழிவுகள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.

மேலும்,  ஐ நா பொதுச்சபையில் எடுக்கின்ற தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு தங்களின் வீட்டோ அதிகாரம் இருப்பதால் தற்போது இஸ்ரேலுக்கு  உலக நாடுகள் ஆதரவு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply