கம்பளை பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் கம்பளை நெட்டாபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றின் படுக்கை அறையில் மீட்கப்பட்டுள்ளது.
பத்மா தர்மசேன என்ற 63 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சில பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக கம்பளை நகருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்த பணத்தை பெறுவதற்காக யாரேனும் ஒருவர் அவரை படுகொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.