யாழ் மாநகர சபையின் விசேட அறிவிப்பு…! முக்கிய வீதி முடக்கம்….! samugammedia

இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கந்தசஸ்டி விரதம்  எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில்  யாழ் நல்லூர் கந்தசுவாமி  ஆலயத்தின் அருகாமையிலுள்ள வீதிகள் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி உற்சவ காலத்தை முன்னிட்டு வீதிகள் தடை செய்யப்படவுள்ளன என்று யாழ்.மாநகர சபை அறிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் 17 திகதி மற்றும் 19ஆம் திகதி வரை பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணிவரையும் 18ஆம் திகதி சூரன்போர் அன்று நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 7 மணி வரையும் வீதி தடைசெய்யப்படும்.

இந்நிலையில் மக்கள் மாற்றுப் பாதைகளைக் கடைப்பிடிக்குமாறு மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply