சிவில் சமூகத்தவர்களின் உரிமை மீறப்படுமாக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொல்லால் செயலால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான்பெரேரா தெரிவித்துள்ளார்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
குறித்த விடயம் தொடர்பில் ஒழுக்க நெறிக்குழு கோவை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் எங்களுடைய ஒழுக்க நெறிகள் மிக உயர்ந்தவை ஆனால் உறுப்பினர் என்று வந்துவிட்டால் அவர்களுடைய நடத்தை சிவில் சமூகத்தவர்களுக்கு அதைப்பற்றி பேச முடியாது சிறப்புரிமை என்ற போர்வையில் அதற்கு தடை போடப்பட்டுள்ளது
சிவில் சமூகத்தவர்களின் உரிமைகள் மீறப்படுமாக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொல்லால் செயலால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
மேலும் உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை இளைஞர் பிரதிநிதித்துவங்கள் பற்றி எடுத்துக்கொண்டால் முந்தையாஸ் அவர்களும் வேறு ஒரு நோக்கத்திற்காக அதனை செய்து இருக்கலாம் என்றும் இளையத்தவர்களும் வேறு ஒரு நோக்கத்திற்காக அதனைச்செய்து இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்
13ம் திருத்தத்தில் காணி பொலிஸ் அதிகாரம் போன்ற இரண்டையும் வழங்க வேண்டும் எதனை நடைமுறைப்படுத்த முடியுமோ அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இவை பேசு பொருளாக மாத்திரம் இருக்கின்றது இவற்றிற்கு செயல் வடிவம் கொடுக்க எவரும் இல்லை என்றும் அதற்கு செயல்வடிவம் கொடுத்து இருந்தால் உதவிசெயலாளர் நாயகம் இப்படி சங்கடப்பட வேண்டிய தேவை இல்லை என தெரிவித்துள்ளார்
மேலும் நாங்கள் அனைவரும் இணைந்து இலஞ்சத்தையும் ஊழலையும் தடுப்பதற்கு ஒன்றினைய வேண்டும் என்றும் நேற்றைய தினம் சம்மிசில்வா அவரை துரத்த வேண்டும் என கூறினார்கள் கோப்புக்குழுவிலே ஈஸ்டர் விவகாரத்தை கையாண்டது போல இதையும் கையாண்டு இருந்தால் சம்மிசில்வாவை அடுத்த தேர்தலில் போட்டியிடாமல் செய்து இருக்கலாம் என தெரிவித்துள்ளார்
மேலும் நல்லிணக்கம் ஒருமைப்பாடு தவிசாளர் என்ற வகையில் நாங்கள் நிரந்தர தீர்வை காணும் வரையில் தற்காலிக தீர்வை ஏனும் அந்த சந்தர்ப்பங்களில் ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்
மேலும் பலஸ்தீனிய மக்கள் ஒரு நாடு இன்றி வாழ்கின்றார்கள் என்றும் நாங்கள் பல யுத்தங்களை கடந்து வந்தவர்கள் எங்களுடைய பிரச்சனைகளை நாங்கள் தீர்த்துக்கொள்வதை தவிர வேறு ஒருவரை நம்பி நாங்கள் கையேந்த கூடாது என குறிப்பிட்டுள்ளார்
நாங்கள் ஒற்றுமைப்படாத வரை மற்றுமொரு நாடு வந்து எமக்கு உதவி செய்வதாக இல்லை என்றும் ஆகவே எமது உள்நாட்டிற்குள் ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்