பெளத்த விகாரைகள் தொடர்பில் புதிய நீதிமன்றம் வேண்டும் – அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்கிறார் விஜயதாச ராஜபக்ஷ…!samugammedia

பெளத்த விகாரைகள் தொடர்பாக பிரச்சினைகள் எழும் போது அவற்றை தீர்த்து வைக்க பிறிதொரு நீதிமன்றத்தை ஆரம்பிக்க முடியும். என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்   விஜயதாச ராஜபக்ஷ  தெரிவைத்துள்ளார்.

இதற்கான சட்டம் அரசியலமைப்பில் உள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நேற்று  பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள 4 ஆம் நாள் அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

புத்த பகவான் குறிப்பிட்டது போன்று பிக்குமாரின்  பராமரிப்பு என்பது புண்ணியமான பணி  ஆகும். பூஜித்த திஸ்ஸ தேரர்  நோய்வாய்ப்பட்ட தேரர்களை  பராமரிக்க தன்னை முழுவதும் அர்ப்பணித்திருந்தார். அவர்களின் நோய்களை சுகப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு செய்வது ஒரு புண்ணியமாகும் என புத்த பகவான் கூறியுள்ளார். 

பெளத்த விகாரைகள் தொடர்பாக பிரிச்சினைகள் எழும் போது அவற்றை தீர்த்து வைக்க பிறிதொரு நீதிமன்றத்தை ஆரம்பிக்க முடியும் என்ற சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. அனால் கடந்த 40 வருடங்களில்  இந்த சட்டவாக்கத்தை நாங்கள் வழங்கவில்லை. அதன் பிரதிபலனாக இன்று விகாரைகளில் பிரச்சினை எற்படும் போது சாதாரண நீதிமன்றத்தை நாங்கள் நாட வேண்டி உள்ளது.

இதனால் நடைமுறை ரீதியாக சிக்கல்கள் உருவாகலாம். தேரர்கள் சாதாரண நீதிமன்றுக்கு சென்று சாட்சியங்கள் வழங்குவதால் நீண்ட காலம் எடுக்கப்படும் . எனவே இது மத நல்லிணக்கத்துக்கு சிறந்த விடயமாக அமையாது. இவ்விடயம் தேரர்களின் கெளரவத்துக்கு குந்தகமாக அமைகிறது. எனவே அரசியல் அமைப்பினர் இவ்விடயம்  தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். 

இஸ்லாம் சட்டத்தை எடுத்துக்கொண்டால் அவர்களின் மத பிணக்குகளுக்கு பிறிதொரு முறைமை  உள்ளது. அதைப்போல ஏனைய மதங்களுக்கு அவ்வாறான முறைமை உள்ளது. எனவே விகாரை தொடர்பான சட்ட மூலத்தை மகா சங்கத்தினர் மூலம் கருத்தை பெற்று அதை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *