பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம் – நீராடச் சென்ற இளைஞன் மாயம்..! தேடும் பணி தீவிரம் samugammedia

ரம்புக்கன, போலகம பாலத்துக்கு  அருகில், மா ஓயாவில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மா ஓயாவில் நீராடிய  29 வயதுடைய நபரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர்கள் குழுவுடன் பிறந்தநாள் விழாவை நடத்துவதற்காக குறித்த இடத்துக்குச் சென்ற நிலையில் நீராடியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன இளைஞரை தேடும் பணியை பொலிஸாரும்  கடற்படை பிரிவினரும்  ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply