தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான சீட்டு ஒன்றின் இலக்கத்தை தந்திரமாக மாற்றி 2000 ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த இராணுவ சிப்பாய் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ஹொரணை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் களுத்துறை மாவட்ட பிரதிநிதி ஆகியோர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர், ஹொரண நகர விற்பனை பிரதிநிதி ஒருவருக்கும் 200 ரூபா பெறுமதியான போலி சீட்டை காட்டி மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.