வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு…! samugammedia

வவுனியா, தரணிக்குளம் – குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தரணிக்குளம் – குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அயலவர்களால் ஈச்சங்குளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அந்தச் சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் எனத் தடயவியல் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply