பலாங்கொடை மண்சரிவு…! இருவரின் சடலங்கள் மீட்பு…! samugammedia

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்குண்டு உயிரிழந்த இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெயின்தென்ன பகுதியில் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மண்சரிவொன்று ஏற்பட்டது.

இந்த மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் புதையுண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, மண்ணில் புதையுண்டவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில், இரண்டு தினங்களின் பின்னர் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மண்ணில் புதையுண்டு காணாமல் போன ஏனைய இருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். 

 

Leave a Reply