எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கோமாளிகள்…! கிண்டலடித்த ஆளுந்தரப்பு எம்.பி..!samugammedia

முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் ஒரு வெற்றிகரமான வரவு செலவு திட்டம் எனவும் எனவே இவ்வரவு செலவு திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்றையதினம்(14) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
விசேடமாக எதிர்கட்சியினர் ஜனாதிபதி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் எதிர்கட்சியினரின் முன்மொழிவுகளும் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர் கட்சியினரிடம் ஒன்றை கேட்க விரும்புவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வரும் போது கோமாளிகள் போல் எதிர்கட்சியினர் ஓடி ஒழிந்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வன்னி மாவட்டத்தில் உள்ள மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துக்காக தற்போது 10 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அது எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply