ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், காகத்தின் கூட்டுக்குள் குயில் போட்ட முட்டையாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று புதன்கிழமை (15) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முட்டை குஞ்சு பொறித்ததும், குயில் போட்ட குஞ்சை காகம் கொத்தி விரட்டிவிடும். கப்புட்டு கா, கா, அதனைதான் செய்யும்.
பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் கருத்துரைத்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிழலான நாமல் ராஜபக்ஷ எம்.பி,
பட்ஜெட்டின் தங்களுடைய யோசனையும் உள்ளடக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆகையால், ஜனாதிபதி எவ்வளவுதான் முயற்சித்தாலும் சமர்ப்பிக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டத்தை அமுல்படுத்த முடியாது. என்றார்