வட மாகாண தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்குபற்றிய பூப்பந்தாட்ட போட்டி…!samugammedia

இன்போனிற்ஸ் (infonits) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் பூப்பந்தாட்ட போட்டி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது.

விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக 2023 ஆண்டுக்கான வடக்கு மாகாண ரீதியிலான பூப்பந்தாட்ட போட்டியாக இது அமைந்தது. 

வடக்கு மாகாணத்தில் உள்ள 23 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து அணிகள் இந்த போட்டியில் பங்குபற்றின.

இதில் 3 அக்ஸியன்ஸ் ஏ (3axians A) அணியினர் முதலாவது இடத்தினையும், விற்றாலியன்ஸ் (vitalians) அணியினர் இரண்டாவது இடத்தையும், இன்போனெற்றீஸ் ஸ்குவாட் (infonities squad) அணியினர் மூன்றாவது இடத்தினையும் பெற்றனர்.

வடக்கில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையேயான உறவினை வலுப்படுத்தும் நோக்கில் இந்த போட்டி நடாத்தப்பட்டது என்பதுடன், தொடர்ந்தும் இவ்வாறான போட்டிகள் வருடா வருடம் நடாத்தப்படும் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


Leave a Reply