6 வயது மாணவி உயிரிழந்த சம்பவம்: பாடசாலையின் அதிபர் மீது தாக்குதல்..! samugammedia

பிரதேச மக்கள் இணைந்து நடத்திய தாக்குதலில் காயமடைந்த வெல்லம்பிட்டி – வேரகொட வித்தியாலயத்தின் அதிபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் மதில் ஒன்று இன்று மதியம் இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஆறு வயதுடைய சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் 5 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை ஆகியனவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நீர்த்தாங்கிக்கு நீரை ஏந்திச் செல்லும் நீர்க்குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இந்தநிலையில், பாடசாலைக்குள் பிரவேசித்து, அங்கிருந்த அதிபர் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply