யாழில் குளிர்பான நிலையத்தில் பணிபுரியும் பெண்ணுடன் பாலியல் சீண்டல் – ஒருவர் விளக்கமறியலில்! samugammedia

குளிர்பான நிலையத்தில் பணிபுரியும் பெண்ணுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகத்தில் குளிர்பான நிலையம் நடாத்தி வரும் 45 வயது நபர், குளிர்பான நிலையத்தில் கடமையாற்றும் 19 வயது யுவதியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், பாலியல் வீடியோக்களை தொலைபேசி மூலமாக அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த யுவதி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர் நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

Leave a Reply