கந்தானை கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தென்னந்தோட்டம் ஒன்றில் தேங்காய் திருடிக்கொண்டிருந்த நபர் ஒருவரை தோட்ட காவலாளி துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்தவர் கந்தானை பகுதியை சேர்ந்த 32 வயதுடையவராவார்.
இவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பாதுக்க வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.