சித்தங்கேணி இளைஞர் உயிரிழப்பு – வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலா காரணம்? samugammedia

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற களவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார். சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இளைஞனில் உறவினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

அலெக்ஸிடம் லான்ட் மாஸ்டர் வாகனம் உள்ளது. கடந்த 8ஆம் மரம் கடத்தல் சம்பந்தமான விசாரணை ஒன்று உள்ளதாக தெரிவித்த வட்டுக்கோட்டை குறித்த இளைஞனை கைது செய்தனர். இதனால் அலெக்ஸ் இளைஞன் பொலிஸ் நிலையம் செல்ல மறுக்க, அந்த இளைஞனுக்கு துணையாக அவரது நண்பனையும் பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் நாங்கள் இரவு பொலிஸ் நிலையம் சென்றவேளை அலெக்ஸின் கதறல் சத்தம் பொலிஸ் நிலையத்தில் கேட்டது. இந்நிலையில் நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தோம்.

8ஆம் திகதி கைது செய்யப்பட்ட இளைஞனை 12ஆம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவர்மீது நகை திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இதன்போது அலெக்ஸ் உடல்நிலை சீராக இல்லாமல் காணப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார் – என உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்றையதினமும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் உள்ள புதர் ஒன்றில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி பொன்னாலை சனசமூக நிலையத்திற்கு சேதம் விளைவிக்கும் விதத்தில் செயற்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவரை பொலிஸார் அழைத்துச் சென்றதாக அந்த பகுதி கிராம சேவகர் குறிப்பிட்டார். இந்நிலையில் அவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பம் குறித்தும் பொலிஸாரின் செயற்பாடுகள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்தது.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட வண்ணம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *