தாய்லாந்து நாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று நேற்று(18) நாடு திரும்பியவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் காவல்துறை கான்ஸ்டபிளுக்கு போதைப்பொருளை வழங்கிய நபரே கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
இவர் கொழும்பு-08, பொரளை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவர்.
அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு பாங்கொக்கில் இருந்து சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது நேற்று மாலை 04.20 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.