அமைச்சுபதவியில் இருந்து நீக்கப்படவுள்ள ரொஷான்..? ஜனவரியில் மாற்றம்..! வெளியான தகவல் samugammedia

 

விளையாட்டுத் துறை அமைச்சு பதவியில், ஜனவரி மாதம் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.  

தற்போது இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்ததை அடுத்து அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விளையாட்டுத்துறை  அமைச்சராக தற்போது பதவி வகித்து வரும் ரொஷான் ரணசிங்க, அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டு எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்பட வேண்டும் என பல முன்மொழிவுகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply