இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடா..? நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..! samugammedia

இலங்கையில் சீனித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

19,000 மெற்றிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதனால் தட்டுப்பாடு ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தெரணியகலவில்  இன்று (19)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அண்மையில் சீனிக்கு  275 ரூபாய் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட பின்பே சந்தையில் அதிக விலைக்கு சீனி விற்கப்படுகின்றது. 

அத்துடன் வர்த்தகர்கள் சீனியைப் பதுக்கி வைக்கின்ற செயற்பாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply