பருவகால சீட்டினை கொண்டிருக்கும் இ.போ.ச. பயணிகளுக்கு நடத்துநரால் தொல்லை! samugammedia

பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தின் பருவகால சீட்டினை கொண்டிருக்கும் பயணிகளுக்கு நடத்துனர் ஒருவரால் தொடர்ச்சியாக பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் கண்டி டிப்போவுக்கு சொந்தமான  இ.போ.ச பேரூந்து ஒன்றின் நடத்துனர் மீதே பயணிகள் இவ்வாறு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

பாடாசாலை நிறைவு பெறும் நேரத்தில் வருகை தரும் குறித்த பேரூந்து ஆசனங்கள் நிரம்பி சென்றால் ஆட்களை பளை பகுதியில் ஏற்றுதில்லை, 

மாறாக ஆட்கள் குறைவாக இருந்தால் மாத்திரமே ஏற்றி செல்வதாகவும் மேலும் பருவகால அட்டைகளை வைத்திருப்பவர்களை முறைத்து பார்ப்பது மற்றும் முறையற்ற விதத்தில் சீசன் அட்டையினை இழுத்து பெறுவது என சீசன் அட்டையினை பயன்படுத்துபவர்களை அவமானமாக நடாத்திவருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பேரூந்து கட்டனம் பளையிலிருந்து 189 ரூபாய் எனில் 200 ரூபாயினை வழங்கினால் மிகுதி 11ரூபாயினையும் பயணிகளுக்கு வழங்குவதில்லை இவ்வாறு மிகுதியினை வழங்காது தானே மிகுதி பணத்தை எடுப்பதற்காகவா பருவகால அட்டையுடன் பயணம் செய்யும் பயணிகளை புறக்கணித்து பணத்திற்கு முக்கியத்துவம் வழங்குகின்றாரா என பயணிகள் கேள்வி எழுப்புகின்றர்.

இதேவேளை குறித்த பருவ கால அட்டையில் குறித்த பேரூந்து சேவையும் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையினால் அங்கீகரிக்கப்பட்ட குறித்த அட்டையினை கொண்டுள்ளவர்களை இவ்வாறு குறித்த நடத்துனர் நடாத்துவது தவறு எனவும் மேலும் குறித்த நடத்துனர் சிங்கள மொழி பேசுபவர் என்பதால் தம்மால் திரும்ப பேச முடியாத சூழலும் காணப்படுவதாகவும் பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆகவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என வழமையாக பயணிக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Leave a Reply