கிளிநொச்சியில் திடீரென சரிந்து விழுந்த மரம்- இரு கடைகள் சேதம்! samugammedia

கிளிநொச்சி நகரத்தின் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை ஒரு மணியளவில் பாரிய வேப்பமரம் ஒன்று பாறி விழுந்ததில் வர்த்தக நிலையம் ஒன்று உட்பட இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளதுடன், கடையில் உறங்கிக் கொண்டிருந்தவர் காயங்களுக்கு உள்ளாகி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

ஏ-09 வீதியின்  புனித திரேசம்மாள் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையத்துக்கு அருகில் நின்ற பாரிய வேப்பமரம் இன்றையதினம் அதிகாலை ஒரு மணி அளவில் விழுந்துள்ளது. 

கடையில் உறங்கிக் கொண்டிருந்தவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகி தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன்  கடையின் கூரைகள் சேதமடைந்துள்ளது.

Leave a Reply