வட்டுக்கோட்டை பொலிஸாரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் மரணம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் இன்று இரவு பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இளைஞனின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதேவேளை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை அண்மித்த வீதிகளில் வீதித் தடைகள் போடப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.