யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட எழுவைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார் ஒழுங்காக வருகை தருவதில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
சுமார் 700 பேர் வசிக்கும் அடிப்படை வசதிகள் அற்ற குடும்பங்கள் வாழ்ந்து வரும் தீவுப் பிரதேசமாக எழுவைதீவு விளங்குகிறது.
குறித்த பிரதேசத்தில் வெளிநாட்டில் வசிக்கும் கொடையாளி ஒருவரால் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்டது.
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வைத்தியர் ஒருவர் தமது பிரதேசத்துக்கு வருவதாகவும் ஏனைய நாட்களில் அவரை காண முடிவதில்லை என்பது பிரதேச மக்களின் குற்றம் சாட்டுகின்றனர்.
இரவு நேரங்களில் நோய்வாய்ப்படும் மக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாயின் கடல் கடந்து ஊர்காவற்துறை அல்லது யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் இக்கட்டான சூழ்நிலையை அனுபவித்து வருகின்றனர்.
எழுவைதீவு வைத்தியசாலையில் வைத்தியர் தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டு கொடுத்தும் வைத்தியர் இரவு நேரங்களில் தங்குவதில்லை.
அதுமட்டுமல்லாது குறித்த வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத நாட்களில் முதலுதவி செய்யக்கூடிய தாதியர்கள் பயிற்சி அளிக்கப்படவில்லை என்பதும் அப்பகுதி மக்களின் குற்றச் சாட்டியுள்ளனர்.
ஆகவே எழுவைதீவு மக்களின் சுகாதாரத் தேவையை நிறைவேற்றும் பொருட்டு நிரந்தர வைத்தியர் ஒருவரை தமக்கு நியமித்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.