கடந்த வருட பருவத்தில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இந்த வருடம் விவசாயத்தை ஆரம்பிக்கும் வகையில் ஹெக்டேருக்கு 40 லீற்றர் டீசல் இலவசமாக வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் பங்குபற்றுதலுடன் விவசாயிகளுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் நேற்று வழங்கப்பட்டன.
அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இந்த வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த எரிபொருள் மானியம் வளவ வலயம், ஹம்பாந்தோட்டை, குருணாகல் மாவட்டங்களில் கடந்த ஒரு வருட காலத்தில் பயிர் இழப்பை பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும்.
கடந்த பெரும்போக நெற்செய்கையில் பயிரிடப்பட்ட 65,000 ஏக்கர் வறட்சியினால் சேதமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.