புதிய இலச்சினையை அறிமுகப்படுத்தியது ‘UNITED TRAVELS & HOLIDAYS PVT LTD‘

இலங்கையின் ஹஜ் மற்றும் உம்ரா சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமான  யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் (பிரைவேட்) லிமிடெட் (UNITED TRAVELS & HOLIDAYS PVT LTD )நிறுவனம் தனது புதிய இலச்சினையை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த நிகழ்வு கொழும்பில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் அண்மையில்  இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த நிறுவனத்தின் ஊடாக, சேவையை பெற்றவர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

பொருளாதார சிக்கலின் பின்னர் நாட்டில் உம்ரா கட்டணம் விண்னை முட்டும் அளவிற்கு உயர்ந்திருந்த வேளையில் ”அனைவருக்கும் உம்ரா” எனும் தொனிப்பொருளில் கடந்த ஒக்டோபர் மாதம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனும் சாதாரண கட்டணத்தில் அறிமுகம் செய்து உம்ரா துறையில் பாரிய புரட்சியை இந்நிறுவனம் ஏற்படுத்தியிருந்தது.

அந்த வகையில் இலங்கையில் தற்போது உம்ரா சேவை துறையில் விலையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதுடன், சந்தையில் விலையை நிர்ணயிக்கும் சக்தியாக இந்நிறுவனம் திகழ்ந்து வருகின்றது.

எதிர்காலத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்ற உள்ளவர்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட புதிய ஒரு பேகேஜை  இந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *