
கொழும்பு, பெப் 22: இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளான மூத்த பத்திரிகையாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் “பிலியந்தலையில் உள்ள முதித சமரவிக்ரமவின் இல்லத்தின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவ்வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிலியந்தலையில் உள்ள தனது வீட்டின் மீது இனந்தெரியாத நான்கு நபர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, தனக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என சமுதித சமரவிக்ரம கூறியிருந்தார்.





