தலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடலைச்சுமந்த ஊர்தி, வவுனியா கிளிநொச்சி பளை கொடிகாமம் ஊடாக வடமராட்சியை இன்று பிற்பகல் 3 மணிக்கு வந்தடைந்தது.
அத்துடன் கலிகைச்சந்தி, துன்னாலை, மந்திகை ஊடாக மாலிசந்திமைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தை ஊர்திப்பவனி வந்தடைந்ததும் அங்கு மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அங்கிருந்து நெல்லியடி மத்திய பஸ் நிலையத்திற்கு பிற்பகல் 3மணிக்கு ஊர்தி வந்துசேர்ந்தது. அங்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அங்கு மக்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்ததுள்ளது.
அத்துடன் அஞ்சலி நிகழ்வில் வேலன் சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மக்கள் பலர் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.
தற்போது சாந்தனின் ஊர்திப்பவனி கரணவாய் நவிண்டில் உடுப்பிட்டி ஊடாக வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தை தற்போது வந்தடைந்துள்ளது.
தொடர்ந்து அங்கு மக்கள் பெருந்திரளாக அஞ்சலி செலுத்திவருகின்றனர்.