மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று (21) இரவு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னதாகவே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த இணையக் கட்டமைப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், https://dmtappointments.dmt.gov.lk/ ஊடாக நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் எனவும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 0112 117 116 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ள போதிலும், திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் எவ்வித தடையுமின்றித் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.





