தொல். திருமாவளவனுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் நூல்கள் வழங்கி கௌரவிப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று (21) சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளைத் தொல். திருமாவளவன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் அவருக்கு நூல்கள் அடங்கிய தொகுதியை வழங்கி வைத்துள்ளனர்.

குறித்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply