கல்முனையைச் சேர்ந்த இளைஞர் ராஜு தர்ஷன் விசேட அதிரடிப்படைக்கு தேர்வு!

இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட வீரர்களில், கல்முனை பாண்டிருப்பு அன்புவழிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜு தர்ஷனும் இடம்பிடித்துள்ளார்.

விசேட அதிரடிப்படைக்கான பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள அவர், தற்போது அப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply