யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் தியாகி பொன். சிவகுமாரன் சிலை அமைந்துள்ள பகுதியில், சந்தைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டுப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, கேக் வெட்டி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், அங்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.
அந்த வழியாகச் சென்ற பாடசாலை மாணவர்களும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டமையுடன், வீதியால் பயணித்த பொதுமக்களும் கலந்துகொண்டு சிற்றுண்டிகளைப் பகிர்ந்துகொண்டனர்.
அடுத்து
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட உரும்பிராய் சிவகுமாரன் சிலையடியில் தலைவர் பிரபாகரனின் 72 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பொங்கல் பொங்கி, கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்கள்.
சிவகுமாரன் சிலை முன்றலில் பெரிய பானையில் 72 பிடி அரிசியை இட்டு பொங்கல் பொங்கி அப்பகுதி மக்களிடம் பரிமாறினர்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், உபதவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன் மற்றும் சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைபரப்புச் செயலாளர் நடராஜர் காண்டீபன், கோப்பாய்த் தொகுதி அமைப்பாளர் பரமானந்தம் பிரகலாதன் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வீதியால் பயணித்த பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலருக்கும் கேக் வழங்கி வைக்கப்பட்டது.



