விளக்கமறியலிலிருந்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 11 பேருக்கு இன்று என்ன நடந்தது?

அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26) முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 11 பேரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுராதபுரம் ருவன்வெலிசாய மகா தூபி வளாகத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ருவன்வெலிசாயவுக்கு அருகில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில்,

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து, குறித்த 11 பேரையும் இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களைப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply