கல்முனை பிரதேச நல்லிணக்க வலையமைப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்.

கல்முனை பிரதேச நல்லிணக்க வலையமைப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்.

(றாசிக் நபாயிஸ்,
மருதமுனை செய்தியாளர்)

வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) ஒத்துழைப்புடன் முன்னெடுத்து வரும் “பல்லின சமூகங்களுக்கிடையே சமூக சகவாழ்வினை மேம்படுத்தல்” செயற்றிட்டத்தின் கீழ், கல்முனை பிரதேச மட்ட நல்லிணக்க வலையமைப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் கூட்டம் இன்று (26) கல்முனை பிரதேச செயலக ஸ்மார்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனைப் பிரதேச செயலக தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் எஸ். சயறூஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ. அஸீஸ் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டு, சமூக முரண்பாடுகளை அடையாளம் காணுதல், நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் அவற்றைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தவிசாளர் ஜனாபா எம். றிலீபா பேகம் மற்றும் திட்ட இணைப்பாளர் எம்.ஐ. றியாழ் ஆகியோரும் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.

இக்கலந்துரையாடலில் சகவாழ்வுச் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், பிரஜாசக்தி குழுக்கள், முன்பள்ளி ஆசிரியைகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, கல்முனை பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் வலுப்படுத்தும் நோக்கில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பிரதேச மட்ட நல்லிணக்க வலையமைப்பை உருவாக்கி, ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply