ஆவரங்காலில் உணர்வுபூர்வமாக மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு!

மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கௌரவிக்கும் நிகழ்வு ஆவரங்கால் சர்வோதய விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று புதன்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு, அங்குள்ள நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து பெற்றோர் மற்றும் உரித்துடையோர் வரவேற்கப்பட்டு, நிகழ்வு நடைபெறும் பிரதான இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வருகை தந்திருந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply