பருத்தித் துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.
பரூத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் உபயோகமாய் தலமையிடம் பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஆகியோரும் மாவீரர் களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து சென்ற கூட்ட அறிக்கை ஆராயப்பட்டு திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட்தும் அதனை தொடர்ந்து சபைக்கான நிதி கொடுக்கல் அனுமதிகள், நிதிக்குழு கூட்ட அறிக்கைகள் என்பன ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



