வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல்

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை, தீருவில் சதுக்கத்தில் நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ள நிலையில், வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்துமாறு நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தீருவில் சதுக்கம் சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வில், மாலை 6.05 மணிக்கு நினைவொலி எழுப்பப்பட்டுப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வல்வெட்டித்துறை உள்ளிட்ட வடமராட்சியின் பல பகுதிகளிலுள்ள பொதுமக்களில், ஏனைய மாவீரார் துயிலும் இல்லங்களுக்குச் செல்பவர்கள் தவிர்ந்த ஏனையோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply