மஹிந்த தலைமையிலான அரசு கடன் வாங்கியே நாட்டை சீரழித்தது! – ஹெரான் விக்ரமரத்ன சீற்றம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமானது கடன்வாங்கியே இந்த நாட்டை சீரழித்தது. கடன் வாங்குவதில் பிரச்சினையல்ல. வாங்கும் கடனை எவ்வாறு பயன்படுத்தப்போகின்றோம் என்பதிலேயே பிரச்சினை உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வேலைத்திட்டங்களை செயற்படுத்தும்போது நூற்றுக்கு 2.5 வீதம் டொலர் கிடைக்கலாம். ஆனால் நூற்றுக்கு எட்டரை சதவீதம் கடன் வாங்கியுள்ளனர்.

இந்தத் தொகைக்கு கடனை பெறுவார்களாயின் அந்தக் கடன் தொகையை கொண்டுவந்து வெள்ளை யானையை தயாரிப்பதற்காக செலவிடுவார்களா?

மாநாட்டு மண்டபங்கள், கிரிக்கெட் விளையாடாத கிரிக்கெட் மைதானங்கள், கப்பல் வராத துறைமுகங்கள், விமானங்கள் தரையிரங்காத விமான நிலையங்களை அமைத்தனர். இலாபம் இல்லாத அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தனர். – என்றார்

Leave a Reply