கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலையின் இரும்புகள் திருட்டு: இராணுவ சிப்பாய் உட்பட தரகர் கைது

யாழ்ப்பாணம், மார்ச் 28

யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலிருந்து இரும்புகளை விற்பனை செய்து வந்த இராணுவ சிப்பாய்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இரும்பு வாங்கியவரும், இடைத்தரகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை இராணுவ சிப்பாய்கள் சிலர் விற்பனை செய்துவந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் இரும்பு வாங்கியவரும் இந்த திருட்டு வியாபாரத்தில் இடைத்தரகராக செயற்பட்டவரும் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மேலும் இரும்பு கடத்துவதற்காக பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தொிவிக்கின்றன.

Leave a Reply