யாழ். சுதுமலையில் அதிகாலை வீடு புகுந்து வாள்வெட்டு

யாழ்ப்பாணம், மார்ச் 28

யாழ்.மானிப்பாய் – சுதுமலை தெற்கு இரும்பக்காரன் வீதியை சேர்ந்த சிவானந்தன் சஜிதரன் என்பவர் மீது  அதிகாலை 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட வன்முறை கும்பல் வீடு புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply