
கொழும்பு, மார்ச் 28
வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) மாநாடு இம்முறை இலங்கையில் இன்று ஆரம்பமாகி வரும் 30 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் முறையே இன்றும் நாளையும் நடைபெற உள்ள பிம்ஸ்டெக் சிரேஷ்ட அதிகாரிகள் சந்திப்பு மற்றும் அமைச்சர்கள் சந்திப்பிற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ள அதேவேளை, மியான்மாரின் வெளிநாட்டு அமைச்சர் இந்த மாநாட்டில் இணைய வழியாகப் பங்கேற்பார்.
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களின் மெய்நிகர் பங்கேற்புடன் 30 ஆம் திகதி 5 ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்குவார்.
இந்த உச்சி மாநாட்டில் மியான்மாரின் வெளிநாட்டு அமைச்சர் மியான்மாரை பிரதிநிதித்துவப்படுத்துவார். உச்சிமாநாடு மற்றும் தொடர்ச்சியான கூட்டங்களின் போது, பிராந்தியக் குழுவாக பிம்ஸ்டெக் அடைந்து கொண்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதிநிதிகள் கலந்துரையாடுவர





